Connect with us

“HBD Leonardo DiCaprio: இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் Titanic Hero!”

Cinema News

“HBD Leonardo DiCaprio: இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் Titanic Hero!”

லியோணர்டோ டிகாப்ரியோ, 1974ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி அமெக்காவில் உள்ள கலிஃபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்தார். 90களின் ஹாலிவுட்டின் தலைசிறந்த நடிகராக இருந்தார். நடிகர், தயாரிப்பாளர் என பல்வேறு முகங்களை கொண்டிருந்தார். பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்தற்காக குறிப்பிடும்படியான அளவு பெயர் பெற்றிருந்தார். நமக்கு இவர் அறிமுகமானது ஜேக்காக, ஆனால் இவர் 5 வயதிலேயே தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் தோன்ற துவங்கிவிட்டார்.

பல விளம்பரங்கள் மற்றும் கல்வி படங்களில் நடித்துள்ளார். 1990களில் தொடர்ந்து தொலைக்காட்சி தொடரில் நடிக்கத்துவங்கினார். அந்த ஆண்டே பெரிய திரையில் ஒரு திகில் திரைப்படத்தில் நடித்தார். அது கிரைட்டர்ஸ் 3 ஆகும். 1992ம் ஆண்டு தி பாய்ஸ் லைஃப் படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்தது. பின்னர் வாட்ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப என்ற படத்திற்கு அவர் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதில் அறிவு குறைபாடுள்ள பதின்வயது பையனாக நடித்திருந்தார். பின்னர் தொடர்ந்து நிறைய நல்ல படங்களில் நடித்திருந்தார்.

90களின் மத்தியில் அவர், பரவலான அளவு ரசிகர்களை கவர்ந்திருந்தார். 1996ம் ஆண்டு ஷேக்ஸ்பியரின் ரோமியோ – ஜீலியட் படத்தில் நடித்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்தார். 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூனிக் காவிய படைப்பான டைட்டானிக்கில் நடித்தார். இந்தப்படம் உலகம் முழுவதும் அவருக்கு புகழை தேடித்தந்தது. இதில் ஜேக் டாவ்சன் கதாபாத்திரத்தில், ரோசை காதலித்து அசத்தியிருப்பார். இவர்களின் நடிப்பு உலக மக்களை வெகுவாக கவர்ந்தது. டைட்டானிக் என்ற கவிழ்ந்த கப்பலில் ஏற்பட்ட காதல் கதை அது.

இதற்குப்பின் அவருக்கு பல வாய்ப்புகள் குவிந்தது. பின்னர் அவர் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடிக்கத்துவங்கினார். இதில் பல வெற்றி படங்களை நடித்தார். 4 முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டு, தி ரெவனன்ட் படத்திற்காக இவர் ஆஸ்கர் விருது பெற்றார். தொடர்ந்து வெற்றிபடங்களுடன், ஆஸ்கர் பரிந்துரைகளும் இருந்துகொண்டேதான் இருந்தது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

புவி வெப்பமடைதல் குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் பில்க் கிளிண்டனை ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 2000மாவது ஆண்டு பேட்டி கண்டார். உலக பூமி தினத்தையும் நடத்தினார். இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலில் சேர்ந்தார். சுற்றுச்சூழல் குறித்து குரல் கொடுத்து வரும் இவர் இயக்கிய தி 11 ஹவர் என்ற ஆவணப்படம் 2007ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. ஐஸ் ஆன் ஃபயர் என்ற பருவநிலை மாற்றம் குறித்த ஆவணப்படத்தையும் தயாரித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரீ-ரிலீஸ் ஆகும் கிறிஸ்டோஃபர் நோலனின் ‘இன்டர்ஸ்டெல்லர்’ திரைப்படம்..!!

More in Cinema News

To Top