Connect with us

“IPL 2024 Auction: மிட்செல் ஸ்டார்க்கை 24 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா அணி!”

IPL 2024

“IPL 2024 Auction: மிட்செல் ஸ்டார்க்கை 24 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா அணி!”

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில், அதனை உடைத்து புதிய வரலாறு படைத்துள்ளார் சக அணி வீரர் மிட்செல் ஸ்டார்க்.

அவரை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடுமையான போட்டிக்கு பிறகு ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ஆஸி கேப்டன் பாட் கம்மின்ஸ் படைத்த சில மணித்துளிகளில் அதனை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். தற்போது நடந்து வரும் IPL மினி ஏலத்தில் சில மணிநேரங்களுக்கு முன்பு பாட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியிருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ஏலத்தின் 4வது செட்டில் இந்த சாதனையை உடைத்து புதிய வரலாறு படைத்தார் மிட்செல் ஸ்டார்க். குஜராத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஸ்டார்க்கை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா அணி நிர்வாகம் IPL வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து ஸ்டார்க்கை கைப்பற்றியது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in IPL 2024

To Top