Connect with us

IPL 2024 : எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

Featured

IPL 2024 : எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் RR – RCB அணிகள் மோத உள்ளது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .

நடப்பு தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள டியூபிலிசஸ் தலைமையிலான பெங்களூரு அணி 7 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போய்க்கிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜிம்னாஸ்டிக் வீராங்கணை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு..!!

More in Featured

To Top