Connect with us

பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி – பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

Featured

பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி – பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் நெருங்கி வரும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அசாம் மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 65 ஆவது லீக் போட்டியில் PBKS – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார் . இதையடுத்து ராஜஸ்தான் அணியை ரன் குவிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பஞ்சாப் அணி பந்துவீசியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கைடமோர் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்ததுது ஆட்டமிழக்க ரியான் பராக் மட்டும் அதிகாரபட்சமாக 48 ரன்கள் எடுத்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது .

இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் அசாமில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top