Connect with us

பேட் கம்மிங்சின் அற்புதமான கேப்டன்சியால் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி..!!

Featured

பேட் கம்மிங்சின் அற்புதமான கேப்டன்சியால் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஹைதராபாத் அணி..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் அற்புதமாக விளையாடிய ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் RR – SRH அணிகள் மோதியது .

இந்நிலையில் ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ராஜஸ்தான் அணியின் மிரட்டலான பந்துவீச்சை ஓரளவு தாக்குப்பிடித்து நிதானமாக ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த 175 ரன்கள் குவித்தது . இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

இதையடுத்து இலக்கை கடந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடலாம் என்ற முனைப்பில் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது.

பவுலிங் , பீல்டிங் என இரும்பு கோட்டை அமைத்த ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் எதிரணியின் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டார். ராஜஸ்தான் வீரர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தபோதும் இறுதி வரை ராஜஸ்தான் அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.

20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ராஜஸ்தான் அணி தோல்வியை ஒப்புக்கொண்டது . இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றதுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் - கண்கலங்க வைத்த சோக சம்பவம்

More in Featured

To Top