Connect with us

எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம் – இறுதிப்போட்டி தோல்விக்கு பின் கொல்கத்தா வீரர்களை பாராட்டிய ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ்..!!

Featured

எங்கள் தோல்விக்கு இதுதான் காரணம் – இறுதிப்போட்டி தோல்விக்கு பின் கொல்கத்தா வீரர்களை பாராட்டிய ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ்..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது . லீக் மற்றும் பிளே ஆப் போட்டிகள் முடிந்து தொடரின் கடைசி போட்டியான இறுதிப்போட்டி நேற்று கோலாகலமாக நடைபெற்றது .

சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் KKR – SRH அணிகள் மோதியது .

இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் . இதையடுத்து ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுக்குள் வைக்க கொல்கத்தா அணி பந்துவீசியது.

ஆரம்பம் முதல் கொல்கத்தா அணியின் அனல் பறக்கும் பந்துவீச்சை சமிழ்க்க முடியாமல் திணறிய ஹைதராபாத் அணி தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து பரிதாப நிலைக்கு சென்றது.

இறுதி போட்டியில் 20 ஓவர் முழுமையாக விளையாடிய ஹைதராபாத் அணி 18.3 ஓவரில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை 10 ஓவருக்குள் கடந்தது.

இந்த அபார வெற்றியுடன் கோப்பையையும் கைப்பற்றிய கொல்கத்தா அணிக்கு தற்போது பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

இந்நிலையில் ஹைதராபாத் அணியின் தோல்விக்கு பேசிய அந்த அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் கூறியதாவது :

“கொல்கத்தா வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். நண்பர் மிட்சல் ஸ்டார்க் மீண்டும் தனது பலத்தை காட்டியுள்ளார். எங்களது ஆட்டம் போதுமானதாக இல்லை.

அகமதாபாத்தில் நடந்த குவாலிஃபையர் 1 போட்டியைப் போலவே, எல்லா விதத்திலும் அவர்கள் மிஞ்சிவிட்டார்கள். நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்

சவாலான பிட்ச்சாக இருந்ததால் 200+ ரன்கள் எடுக்க முடியாது என தோன்றியது. ஆனால், 160 ரன்கள் எடுத்திருந்தால் எங்களுக்கு வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் KKR பந்துவீச்சாளர்கள் எங்களுக்கு வாய்ப்பையே கொடுக்கவில்லை என SRH கேப்டன் பேட் கம்மிங்ஸ் கூறியுள்ளார்.

More in Featured

To Top