Connect with us

RR VS SRH : இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..? பரபரப்பான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு ..!!

Featured

RR VS SRH : இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்..? பரபரப்பான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச முடிவு ..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச முடிவு செய்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் RR – SRH அணிகள் மோத உள்ளது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .

நடப்பு தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆவது இடத்தில் உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "ATMAN ON FIRE " Thug Life படத்திற்கான டப்பிங் பணிகளை தொடங்கினார் நடிகர் சிலம்பரசன்..!!

More in Featured

To Top