Connect with us

IPL 2024 : முக்கிய போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு – ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு..!!

Featured

IPL 2024 : முக்கிய போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு – ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ராஜஸ்தான் அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் RR – RCB அணிகள் மோத உள்ளது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் கேப்டன் டியூபிலிசஸ் களமிறங்கினர். அதிரடியாக தொடங்கிய இருவரும் அரைசதம் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோலி 33 ரன்னிலும் டியூபிலிசஸ் 17 ரன்னிலும் வெளியேறினர்.

அடுத்து வந்த க்ரீன் 27 ரன்னிலும் மறுபக்கம் அதிரடியாக விளையாடிய பட்டித்தார் 34 ரன்னிலும் வெளியேறினர் . அவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் ஸ்கோர் மிகவும் மந்தமாக ஏறியது.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போய்க்கிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘அமரன்’ பட காட்சியில் தெரிந்த தொலைபேசி எண் - தொடர் அழைப்புகளால் அல்லாடும் மாணவர்..!!

More in Featured

To Top