Connect with us

IPL 2024 : ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி..!!

Featured

IPL 2024 : ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கொல்கத்தா அணி..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிபியர் போட்டியில் அபாரமாக ஆடிய கொல்கத்தா அணி ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு கெத்தாக முன்னேறியுள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் SRH – KKR அணிகள் மோதியது

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் .

அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இதில் அணிக்கு அதிரடியான ஆட்டத்தை கொடுப்பார்க்ள என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்வரிசை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர் .

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஹைதராபாத் அணி 159 ரன்கள் மட்டுமே குவித்தது . இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர் . அதிரடியான ஆட்டத்தை தொடங்கிய இருவரும் தலா 20 ரன்கள் எடுத்த நிலையில் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து வந்த வெங்கடேஷ் மற்றும் கேப்டன் ஷ்ரேயஸ் அதிரடியில் மிரட்டி அரைசதம் கடந்து அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் 13.4 ஓவரில் இலக்கை கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தினர்.

இதையடுத்து சென்னையில் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா அணி முன்னேறியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'சர்தார் 2' பட சண்டை பயிற்சியாளர் மறைவு எதிரொலி - சென்னையில் நாளை மறுநாள் படப்பிடிப்பு ரத்து..!!

More in Featured

To Top