Connect with us

விஜய்–த்ரிஷா சர்ச்சைக்கு குஷ்பு விளக்கம்!

Cinema News

விஜய்–த்ரிஷா சர்ச்சைக்கு குஷ்பு விளக்கம்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தொடர்பான விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ்–மீனாட்சி தம்பதியின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு விஜய்யும் த்ரிஷாவும் ஒரே காரில் வந்ததாகவும், ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்ததாகவும் கூறப்பட்டதால் இந்த விஷயம் இணையத்தில் பெரும் விவாதமாக மாறியது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வந்த நிலையில், இயக்குநர் பார்த்திபனும் இதுகுறித்து வீடியோ வெளியிட்டு தனது கருத்தை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு சுந்தரிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சேர்ந்த விஷயம் என்றும், பொதுமக்களை பாதிக்காத ஒரு விஷயத்தை தேவையில்லாமல் பெரிய சர்ச்சையாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து அவரது புகழையோ அரசியல் பயணத்தையோ மதிப்பிடுவது சரியானது அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். குஷ்புவின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top