Connect with us

IPL 2024 : ஹைதராபாத் பேட்டிங் சொதப்பலோ சொதப்பல் – கொல்கத்தா அணிக்கு 114 ரன்கள் இலக்கு..!!

Featured

IPL 2024 : ஹைதராபாத் பேட்டிங் சொதப்பலோ சொதப்பல் – கொல்கத்தா அணிக்கு 114 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் தொடரின் இறுதி போட்டி சென்னையில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கொல்கத்தா அணிக்கு 114 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது . லீக் மற்றும் பிளே ஆப் போட்டிகள் முடிந்து தொடரின் கடைசி போட்டியான இறுதிப்போட்டி இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.

இதில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகிறது.

இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மிங்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார் . இதையடுத்து ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுக்குள் வைக்க கொல்கத்தா அணி பந்துவீசியது.

ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அபிஷேக் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக்கட்டினர். அடுத்து வந்த ட்ரிப்பாடி மற்றும் மார்க்ரம் 9 மற்றும் 20 ரன்களில் வெளியேற அடுத்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

ஆரம்பம் முதல் அசத்தலாக பந்துவீசிய கொல்கத்தா அணி என்றும் இல்லாமல் இன்று ஹைதராபாத் அணியை கதிகலங்க வைத்தனர் . தொடக்கம் முதல் திணறிய ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது கொல்கத்தா அணி பேட்டிங் செய்கிறது.

இந்நிலையில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் இன்று நடைபெறும் இந்த மாபெரும் இறுதிப்போட்டியில் எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது எந்த அணி தோல்வி பெற்று இரண்டாம் இடம் பிடிக்கப்போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்பு மிக்க அரசுப் பதவிகளில் அதிகார துஷ்பிரயோகம் - கொதிக்கும் அண்ணாமலை..!!

More in Featured

To Top