Connect with us

குவாலிபியர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

Featured

குவாலிபியர் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய முடிவு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் குவாலிபியர் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் SRH – KKR அணிகள் மோத உள்ளது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது . இதையடுத்து ஹைதராபாத் அணியின் ரன் குவிப்பை தடுக்கும் வகையில் பந்துவீச கொல்கத்தா அணி தயாராகி வருகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் கம்மிங்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது .

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி உள்ள ஷ்ரேயஸ் தலைமையிலான கொல்கத்தா அணி 9 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் உள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வென்று இறுதிப்போட்டிக்கு செல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மருத்துவரான நடிகை மஞ்சு வாரியரின் மகள் - வைரல் போட்டோ..!!

More in Featured

To Top