Connect with us

கோப்பை கனவை அடையாமல் IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்தார் RCB வீரர் தினேஷ் கார்த்திக்..!!

Featured

கோப்பை கனவை அடையாமல் IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்தார் RCB வீரர் தினேஷ் கார்த்திக்..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறிய நிலையில் கோப்பை கனவை அடையாமல் IPL-ல் இருந்து பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் RR – RCB அணிகள் மோதியது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் ராஜஸ்தான் அணியின் பந்துகளை சமாளிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி ஆடிய பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் அட்டகாசமாக ராஜஸ்தான் அணி பெங்களூரு கொடுத்த எளிய இலக்கை ஆசால்டாக் அடைந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் அணியிடம் பெற்ற தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் கோப்பை கனவு மீண்டும் கனவாகவே போயுள்ளது.

இந்நிலையில் கோப்பை கனவை அடையாமல் IPL-ல் இருந்து பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் தனது ஓய்வை அறிவித்துள்ளார். சக வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மைதானத்தில் தினேஷ் கார்த்திக்குக்கு பிரியாவிடை கொடுத்த காட்சிகள் இணையத்தில் செம வைரலாக வலம் வருகிறது .

போட்டிக்கு பின் உரையாற்றிய தினேஷ் கார்த்திக் கூறியதாவது :

6 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றபோது மிகவும் சந்தோஷப்பட்டோம். இந்த வருடம் எங்களுக்கானது என நினைத்தோம். விளையாட்டை பொறுத்தவரை எல்லா போட்டிகளும் சந்தோஷமான முடிவுகளை கொடுக்காது. சில கடினமான நாட்களும் இருக்கும். இன்று எங்களின் கடினமான நாள் IPL-ல் இதுவே எனது கடைசி ஆட்டம் என நினைக்கும் போது ரொம்பவே எமோஷனலாக உள்ளது என தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மயக்கம் என்ன: 'உன்னோட யாமினியை கண்டுபிடித்துவிட்டால், நீ அதிர்ஷ்டசாலி!' – செல்வராகவன்..

More in Featured

To Top