Connect with us

IPL 2024 : தோனியின் சாதனையை சமன் செய்வாரா பேட் கம்மின்ஸ்..? இறுதிப்போட்டியில் இன்று KKR – SRH அணிகள் மோதல்..!!

Featured

IPL 2024 : தோனியின் சாதனையை சமன் செய்வாரா பேட் கம்மின்ஸ்..? இறுதிப்போட்டியில் இன்று KKR – SRH அணிகள் மோதல்..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடர் ஆரம்பித்து பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் தொடரின் இறுதி போட்டி சென்னையில் நடைபெற உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது . லீக் மற்றும் பிளே ஆப் போட்டிகள் முடிந்து தொடரின் கடைசி போட்டியான இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது.

இதில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் KKR – SRH அணிகள் மோதுகிறது.

இதில் இந்த முறையும் சென்னை அணி கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுடன் வெளியேறியது . இந்நிலையில் தோனி செய்த மாபெரும் சாதனையை கம்மிங்ஸ் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

50 ஓவர் உலக கோப்பை மற்றும் ஐபிஎல் கோப்பையை வென்ற ‘ஒரே கேப்டன்’ என்ற ‘தல’ தோனியின் சாதனையை SRH கேப்டன் பேட் கம்மின்ஸ் சமன் செய்வாரா என ரசிகர்கள் செம ஆவலாக உள்ளனர்.

ஏற்கனவே கடந்தாண்டு கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்த நிலையில் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்புக்கு பலன் கிடைக்குமா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வேகமெடுக்கும் படப்பிடிப்பு - SK 23 படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ..!!

More in Featured

To Top