Connect with us

IPL 2024 : மீண்டும் கனவாய் போன ஐபில் கோப்பை – தொடரில் இருந்து வெளியேறியது பெங்களூரு அணி..!!

Featured

IPL 2024 : மீண்டும் கனவாய் போன ஐபில் கோப்பை – தொடரில் இருந்து வெளியேறியது பெங்களூரு அணி..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியை வீழ்த்தி தொடரில் இருந்து வெளியேற்றியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் RR – RCB அணிகள் மோதியது.

ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஆரம்பம் முதல் ராஜஸ்தான் அணியின் பந்துகளை சமாளிக்க முடியாமல் தட்டுத்தடுமாறி ஆடிய பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 172 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கஹோலர் களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்து அசத்துவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் கஹோலர் உடன் இணைந்து ஆடிய நிலையில் இருவரும் தலா 20 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

எளிமையான இலக்கு என்பதால் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் மெல்ல மெல்ல ஆடி ரன்களை சேர்த்த ராஜஸ்தான் அணி 19 ஆவது ஓவரில் இலக்கை கடந்து வெற்றிபெற்றது.

ராஜஸ்தான் அணியிடம் பெற்ற தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் கோப்பை கனவு மீண்டும் கனவாகவே போயுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காதலனை கரம்பிடிக்க போகும் சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் - வைரலாகும் எங்கேஜ்மெண்ட் போட்டோஸ்..!!

More in Featured

To Top