Connect with us

IPL 2024 : பேட்டிங்கில் ஆட்டம் கண்ட ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு..!!

Featured

IPL 2024 : பேட்டிங்கில் ஆட்டம் கண்ட ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்கள் இலக்கு..!!

நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுகள் சிறப்பாக ஆரம்பித்துள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணிக்கு 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் RR – SRH அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் வெல்லும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொள்ளும்.

இந்நிலையில் ரசிகர்களின் ஏகபோக எதிர்பார்ப்பில் நடைபெறும் இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் களமிறங்கினர். இதில் அணிக்கு அதிரடியான ஆட்டத்தை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெட் 34 ரன்களில் வெளியேற மறுமுனையில் ஆடிய அபிஷேக் வெறும் 12 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

அடுத்து வந்த திரிபாதி அதிரடியாக விளையாடி அரைசதம் கடப்பார் என்று நினைத்தபோது 37 ரன்னில் வெளியேறினார் . பின்னர் வந்த கிளசன் ராஜஸ்தான் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட அவரும் அரைசதம் கடந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார் .

பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஹைதராபாத் அணி 175 ரன்கள் குவித்தது . இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெல்லப்போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இறக்கும் தருவாயிலும் இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த ஓட்டுநர் - கண்கலங்க வைத்த சோக சம்பவம்

More in Featured

To Top