Connect with us

“IPL வரலாற்றில் முதல்முறையாக அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்ட ஆஸ்திரேலியா அணியின் Captain!”

IPL 2024

“IPL வரலாற்றில் முதல்முறையாக அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்ட ஆஸ்திரேலியா அணியின் Captain!”

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ். அவரை ரூ.20.5 கோடிக்கு வாங்கியுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

ரூ.2 கோடி அடிப்படை விலையில் ஏலம் விடப்பட்ட அவரை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் போட்டி போட்டன. ரூ.7 கோடி வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை வாங்க ஆர்வம் காட்டியது.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகமும், சன்ரைசர்ஸ் நிர்வாகமும் குதிக்க ஏலம் சூடுபிடித்தது. சன்ரைசர்ஸ் ரூ.12 கோடி என விலையை அதிகரிக்க, ஆர்சிபி அதை ரூ.17 கோடி ஆக்கியது. இறுதியில் ரூ.20.5 கோடிக்கு அவரை வாங்கியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.

இதன்மூலம் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம் போன வீரர் எனும் சாதனையை படைத்தார் கம்மின்ஸ். இதற்கு முன் பஞ்சாப் அணி ரூ.18.5 கோடி கொடுத்து இங்கிலாந்து வீரர் சாம் கர்ரனை வாங்கியதுதான் அதிகபட்சமாக இருந்தது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in IPL 2024

Advertisement
 

Trending

 
Advertisement
To Top