Connect with us

“ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘DUNKI’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!”

Cinema News

“ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘DUNKI’ படத்தின் முழு விமர்சனம் இதோ..!”

உலகம் முழுவதும் மைக்ரேட் என சொல்லப்படும் இடம்பெயர் மக்களின் துயர் அதிகமாகவே உள்ளது. சில மக்கள் தங்களுக்கு பிடித்த இடத்தில் வாழ விரும்ப முயற்சித்து வருகின்றனர். ஆனால், அரசு அதற்கு எல்லாம் அனுமதி இல்லை என அடித்து விரட்டி பெரிய பெரிய சுவர் எல்லாம் எழுப்பி எல்லைகளை பிரித்து வைத்திருக்கிறது.

PK படத்தில் ஏலியனை வைத்து இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்து போல்டாக படம் எடுத்த ராஜ்குமார் ஹிரானி இந்த முறை ஷாருக்கான் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு பஞ்சாபில் பிறந்து வளர்ந்தாலும் லண்டனுக்கு குடிபுக வேண்டும் என்கிற ஆசையில் என்னவெல்லாம் கோமாளித்தனம் செய்கின்றனர். அவர்களின் லட்சியம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை காமெடி கலந்த கருத்துள்ள படமாக கொடுத்துள்ளார்.

பிக் பென் என்கிற வார்த்தையை யாராவது சொன்னாலே லண்டன் நினைவுகளில் மிதக்கும் ஒரு குழு லண்டனுக்கு செல்ல சரியான ஆங்கில அறிவு வேண்டும் என நடத்தப்படும் தேர்வில் ஃபெயில் ஆகி விடுகின்றனர். அதன் பின்னர் அவர்கள் குறுக்கு வழியை ஹர்தி சிங் எனும் ஷாருக்கானின் உதவியுடன் எப்படி சாத்தியமாக்க போராடுகின்றனர். என்னவெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கின்றனர் என்பதை தான் திரைக்கதையில் சுவாரஸ்யம் கலந்து கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களை போலவே அவரது காமெடி எழுத்துகளுக்கு ரசிகர்கள் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

ராஜ்குமார் ஹிரானி வழக்கம் போல இந்த முறையும் பெரிய துப்பாக்கிகளின் உதவிகளை நாடவில்லை. ஷாருக்கானை வைத்துக் கொண்டு ஜவான், பதான் போல அனல் தெறிக்கும் ஆக்‌ஷனை செய்து பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து விடலாம். ஆனால், அவருக்குள் இருக்கும் நல்ல நடிகரையும் காமெடியனையும் வெளியே கொண்டு வந்து இப்படியும் ரசிகர்களை என்டர்டெயின் செய்யலாம் என காட்டி ஃபீல் குட் மூவியை கொடுத்திருக்கிறார். டாப்ஸியை சொல்லவே தேவையில்லை கிடைக்கிற கேப்பில் எல்லாம் ஷாருக்கான் உடன் இணைந்து அவர் அடிக்கும் டைமிங் காமெடி பக்காவாக வொர்க்கவுட் ஆகி உள்ளது. விக்கி கவுஷல் கொஞ்ச நேரமே வந்தாலும் மனுஷன் மனதில் நிற்கிறார். இசை, ஒளிப்பதிவு என அனைத்து கிராஃப்ட்களும் தூள் கிளப்புகின்றன.

முதல் பாதி விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படியும் சென்ற நிலையில், இரண்டாம் பாதி இன்னொரு டிராக்கில் செல்லாமல் அதே டிராக்கில் செல்வது மற்றும் கதை ஒரே இடத்தில் ஒரு கட்டத்தில் தேங்கி நிற்பது போன்றவை மைனஸ் ஆக மாறத்தான் செய்கிறது. 3 இடியட்ஸ், பிகே அளவுக்கு இந்த படம் இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால், நிச்சயம் ரசிகர்களை என்டர்டெயின் செய்யும்.

See also  தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை தேவை - அன்புமணி வலியுறுத்தல்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top