Connect with us

எஸ்.கே – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..

Cinema News

எஸ்.கே – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் புதிய படத்திற்கு இத்தனை கோடி பட்ஜெட்டா..? வெளியான லேட்டஸ்ட் தகவல்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK23’ படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

தமிழ் உள்பட பல மொழி படங்களை தயாரித்தும் இயக்கியும் வரும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையான சிவகார்த்திகேயனை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் 23 ஆவது படமான இப்படத்தின் பூஜை கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பும் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது .

ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க இவர்களுடன் பல இளம் நட்சத்திரங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனித்துவமான கதைகளுக்கு பெயர்போன இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் நம்ப எஸ்.கே அவர்களை வைத்த எந்த மாதிரியான கதையினை நமக்கு படமாக எடுத்து கொடுக்க போகிறார் என்று தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஒரு பேமிலி என்டர்டைனர் படத்தை நாம் பார்க்கலாம் என அரசில் புரசலாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த மெகா கூட்டணியின் பட்ஜெட் குறித்த விவரங்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் 150 முதல் 200 கோடி வரை இருக்கும் என திரை துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர் .

சமீப காலமாக நம்ப எஸ்.கே கையில் எடுக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படமும் எஸ்.கேவுக்கு மாபெரும் வெற்றியை தேடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

More in Cinema News

To Top