Connect with us

எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

Cinema News

எஸ்.கே-வின் படத்தால் செம அப்சட்டில் கமல்ஹாசன் – அப்படி என்ன தான் நடந்தது..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அமரன் படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் கமல்ஹாசன் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள படம் தான் அமரன் .

ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல தென்னிந்திய நடிகை சாய் பல்லவி நடித்துள்ளதுள்ளார் . இதுமட்டுமின்றி இந்த படத்தில் எஸ்.கே மற்றும் சாய் பல்லவியுடன் சேர்ந்து ஏராளமான இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசரை கடந்த சில நாட்களுக்கு முன் படக்குழு வெளியிட்ட நிலையில் அந்த டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

சென்னையை சேர்ந்த மறைந்த ராணுவ வீரனான முகுந்த் வரதராஜனின் வாழக்கையை மையமாக கொண்டு தான் இப்படம் உருவாக்கபட்டுள்ளது .

இந்நிலையில் எஸ்.கேவின் நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது . ஏற்கனவே படத்திற்கு சொன்ன பட்ஜெட்டை விட அதிகம் செலவாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

இதனால் செலவை குறைக்க செய்யவேண்டிய விஷயங்கள் உடனடியாக செய்யும்படி கமல் கூறியுள்ளார்.இதுவரை நடந்த படப்பிடிப்பினால் படத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த பட்ஜெட்டை விட ரூ. 25 கோடி அதிகமாகிவிட்டதாம்.

இப்படி இருக்கும் சூழலில் , இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளதால் கமல் அவர்கள் செம அப்சட்டில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ‘ஜிமிக்கிஸ் கஸல்’ பாடல் வெளியானது..!!

More in Cinema News

To Top