Connect with us

“இறுதிப்போட்டியின்போது ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம்” – வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட ஆஸ் கேப்டன்

CWC23

“இறுதிப்போட்டியின்போது ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம்” – வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட ஆஸ் கேப்டன்

இந்திய – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலககோப்பை இறுதி போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்களது நோக்கம் என ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சை ஆகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டி நாளை பிற்பகல் கோலாகலமாக நடைபெற உள்ளது . உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஏரளாமான கலை நிகழ்ச்சிகளுடன் இந்த இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அளித்துள்ள பேட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் சலலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைதானம் நிறைந்த எதிரணி (இந்திய) ரசிகர்களை அமைதி ஆக்குவதுதான் தான் நாளைய விளையாட்டில் எங்களுக்கு மன நிறைவை கொடுக்கும். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அந்த நிலையை ஏற்படுத்துவதே எங்களின் நோக்கம்.

இறுதி போட்டி நடைபெறும் நரேந்திர மோடி மைதானத்தில் குவிந்துற்கும் ரசிகர்கள் நிச்சயம் ஒருதலைப்பட்சமாக தான் இருப்பார்கள் என எங்களுக்கு தெரியும் , அதனால் அவர்களை அமைதி படுத்துவதே எங்காத்து இலக்கு.

உலகக்கோப்பை முழுவதும் மிகவும் சிறப்பாக பந்துவீசி வரும் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி நாளைய போட்டியில் எங்களுக்கு மிகவும் சவாலாக இருப்பார்.

சொந்த மண்ணில் விளையாடுவது ஒரு அணிக்கு எப்போதும் கூடுதல் ஊக்கத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், நாங்களும் இங்கே நிறைய விளையாடியுள்ளோம் இந்திய மண் எங்களுக்கு புதிதல்ல ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அதிகரிக்கும் கோடை வெப்பம் - சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!

More in CWC23

To Top