Connect with us

இந்த முறையும் தமிழர்கள் இல்லை – ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

Featured

இந்த முறையும் தமிழர்கள் இல்லை – ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு..!!

டி20 உலக கோப்பை விரைவில் நடைபெற உள்ள நிலையில் அனைத்து நாடுகளும் தங்களது அணி பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் உயிரை கொடுத்து விளையாடி வருகின்றனர் காரணம் டி20 உலக கோப்பை தான்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் பலர் டி20 உலக கோப்பைக்கான அணியில் சேரும் வாய்ப்புள்ளதால் தங்களது முழு திறனையும் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில் அனைத்து நாடுகளும் டி20 உலக கோப்பையில் விளையாட போகும் தங்களது அணியின் பட்டியலை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலககோப்பைக்கான இந்திய அணியின் முழு விவரம் :

ரோஹித் (கேப்டன்), ஜெய்ஸ்வால், கோலி, சூர்யகுமார், பண்ட் (வி.கீ), சஞ்சு சாம்சன் (வி.கீ), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), துபே, ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சாஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, சிராஜ், கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிடில் ஆர்டரில் அதிரடியாக ஆடிவரும் ஷிவம் துபே டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார் . நடப்பு IPL ல் 9 ஆட்டங்களில் ஆடி 350 ரன்களை ஷிவம் துபே எடுத்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கோலிக்கு பிறகு அதிக ரன்கள் குவித்தவரும், சென்னை அணியின் கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை .

மிகப்பெரிய விபத்துக்கு பிறகு ஐபிஎல் தொடரில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலுக்கு இடமில்லை IPL-ல் LSG அணியின் கேப்டனாக ராகுல் செயல்பட்டு வருகிறார் .

சுழற்பந்து வீச்சாளர் சாஹல் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். கடைசியாக கடந்த ஆகஸ்டில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடிய சாஹலுக்கு, நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

See also  திரையரங்குகளில் வசூல் மழை பொழியும் ஸ்டார் படம் - 6 நாட்களில் எவ்ளோ வசூல் தெரியுமா..?

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஒரு தமிழர் கூட இடம்பெறவில்லை என்பது சற்று வருத்தத்திற்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top