Connect with us

“IPL Auction: ஐபிஎல்லில் முதல் பெண் ஏலதாரர்!”

IPL 2024

“IPL Auction: ஐபிஎல்லில் முதல் பெண் ஏலதாரர்!”

IPL 2024-ம் ஆண்டுக்கான மினி வீரர்கள் ஏலம் துபாயில் தொடங்கியுள்ளது. இந்த ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 333 வீரர்கள் உள்ளனர். இதில் வெளிநாட்டு வீரர்கள் 30 பேர் உட்பட மொத்தம் 77 வீரர்களை தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் ஏலம் எடுக்க உள்ளன. மொத்தம் உள்ள 333 பேர் பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள்.

மீதம் உள்ள 119 பேர் வெளிநாட்டு வீரர்கள். இதில் 2 வீரர்கள் ICC உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள்.இறுதிப் பட்டியலில் உள்ள வீரர்களில் 116 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள். மீதம் உள்ள 218 பேர் இதுவரை சர்வதேச போட்டியில் அறிமுகமாகாத வீரர்கள் ஆவர்.

இந்த ஏலத்துக்காக 10 அணிகளும் சுமார் ரூ. 262.95 கோடியை செலவழிக்க உள்ளன. 2018-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ஹ்யூக் எட்மடஸ் என்பவரும், அதற்கு முன் ரிச்சர்ட் மேட்லி என்பவரும் IPL ஏலத்தை நடத்தி வந்தனர்.

ஆனால் இம்முறை IPL மினி ஏலத்தை வழிநடத்த உள்ளார் மல்லிகா சாகர் என்ற பெண். இதன்மூலம் IPL ஏல வரலாற்றில் முதல் பெண் ஏலம் விடுபவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் மல்லிகா சாகர். இதற்கு முன் இவர் WPL, PSL போன்ற பல தொடர்களின் ஏலம் விடும் பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உங்கள் குடும்பத்தின் ஒருவனாக இருப்பேன் – கண்ணீர் மல்க உறுதி அளித்த விஜய்

More in IPL 2024

To Top