Connect with us

ஏங்க இப்படி செஞ்சீங்க : விரக்தியின் உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ரசிகர்கள் செய்த விபரீத சம்பவம்..!!

Featured

ஏங்க இப்படி செஞ்சீங்க : விரக்தியின் உச்சத்தில் மும்பை இந்தியன்ஸ் ரோஹித் ரசிகர்கள் செய்த விபரீத சம்பவம்..!!

மும்பை அணியின் தலைசிறந்த கேப்டனாக இருந்து வந்த ரோகித் ஷர்மாவின் Captainship-க்கு Good Bye சொல்லிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தின் செயலுக்கு ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் கடும் அதிருப்த்தியை தெரிவித்து வருவதுடன் சர்ச்சையை கிளப்பும் விபரீத செயல்களையும் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் தொடராக இருந்து வருவது IPL இத்தொடர் ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை இந்த தொடருக்கு ரசிகர்கள் கொடுத்து வரும் ஆதரவை பற்றி வார்த்தைகளால் விவரிக்கமுடியாது.

ரசிகர்கள் கொண்டாடும் இந்த ப்ரீமியமான தொடரில் இதுவரை அதிகமுறை கோப்பையை வென்றுள்ள அணியாக இருந்து வருவது மும்பை இந்தியன்ஸ் அணி . கோடான கோடி ரசிகர்களை கொண்டுள்ள இந்த அணியின் கம்பீர கேப்டனாக இருந்து வந்தவர் ஹிட் மேன் ரோஹித் சர்மா .

இந்நிலையில் 10 வருடம் 6 முறை கோப்பைகளை ருசிபார்த்த இந்த ஹிட் மேனின் Captainship-க்கு Good Bye சொல்லியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி . பல கோடி ருபாய் கொடுத்து ஹர்டிக் பாண்டியாவை மீண்டும் தங்கள் அணிக்கே இழுத்துள்ள மும்பை அணி தற்போது ரோஹித்தை Captainship-இல் இருந்து தள்ளிநிக்க வைத்து அந்த இடத்திற்கு ஹர்டிக் பாண்டியாவை கொண்டுவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஹித்தின் ரசிகர்கள் தற்போது கோபத்தின் உச்சிக்கு சென்று மும்பை அணியின் நிர்வாகத்தை தாறுமாறாக கழுவி ஊற்றி வருகின்றனர் . இதுமட்டுமின்றி ஹர்டிக் பாண்டியாவையும் கண்டபடி திட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் சிலர் மும்பை அணியின் ஜெர்சி, தொப்பி உள்ளிட்டவைகளை தீயிட்டு கொளுத்தி, எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  போறபோக்கில் கேஸ் போட்ட சமூக ஆர்வலர் - சர்ச்சையில் சிக்கிய விக்ரமின் ‘வீர தீர சூரன்’ திரைப்படம்..!!

More in Featured

To Top