Connect with us

“சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ‘Suriya 43’ படத்தின் கதை இதுதானா?! இப்படி ஒரு பயங்கரமா?!”

Cinema News

“சுதா கொங்கரா இயக்கவிருக்கும் ‘Suriya 43’ படத்தின் கதை இதுதானா?! இப்படி ஒரு பயங்கரமா?!”

கங்குவா ஷூட்டிங் முடிந்ததும் தனது அடுத்தப் படத்துக்கான படப்பிடிப்புக்கு ரெடியாகிவிட்டார் சூர்யா. அதன்படி சுதா கொங்கரா இயக்கும் சூர்யா 43 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜனவரியில் இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா நஸிம் ஆகியோரும் சூர்யாவுடன் நடக்கின்றனர்.

அதேபோல், ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சூர்யா, சுதா கொங்கரா, ஜிவி பிரகாஷ் கூட்டணி சூரரைப் போற்று படம் மூலம் மாஸ் காட்டியிருந்தது. நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான இந்தப் படம் 6 தேசிய விருதுகளை வென்று அசத்தியதும் குறிப்பிடத்தக்கது. டெக்கான் ஏர்லைன்ஸ் கோபிநாத்தின் பயோபிக்காக சூரரைப் போற்று உருவானது. அதேபோல், சூர்யா 43 படத்தையும் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் இயக்கவுள்ளார் சுதா கொங்கரா.

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்தி எதிர்ப்பு போராட்டம். 1937ம் ஆண்டு முதல் தொடங்கிய இந்தி எதிர்ப்புப் போராட்டம், பல வருடங்களாக தீவிரமாக நடைபெற்றது. அதிலும் 1965ல் மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை பின்னணியாக வைத்து தான் சூர்யா 43 படம் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே ‘சூர்யா 43’ டைட்டிலில் ‘புறநானூறு’ என ஒரு சஸ்பென்ஸ் வைத்திருந்தது படக்குழு. அதேபோல், டைட்டில் டீசரில் கலவரம் நடப்பதை போன்ற விஷுவல்ஸ் இடம்பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யா 43 கதை இந்தி எதிர்ப்புப் போராட்டமாக தான் இருக்கும் எனவும், இது பீரியட் ஜானர் படமாக உருவாகலாம் என்பதும் ஓரளவு உறுதியாகியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது - வீரநடை போட்டு விருதை பெற்ற பிரேமலதா விஜயகாந்த்..!!

More in Cinema News

To Top