Connect with us

“தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்! மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை!!”

Cinema News

“தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம்! மூன்றாவது நாளாக தொடரும் சிகிச்சை!!”

நடிகரும் முன்னாள் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு தேமுதிக எனும் அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது கட்சி மக்களிடையே செல்வாக்கை பெற்று வந்த நிலையில் கூட்டணி முடிவுகளால் அவரது கட்சி தொடர்ந்து நடந்த தேர்தல்களில் சோபிக்கவில்லை. இதனிடையே விஜயகாந்துக்கு பேசுவதில் பிரச்சினை, உடல்நல பாதிப்பு போன்றவற்றால் அவரால் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய முடியாமல் போனதும் கட்சி தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட காலமாக அவர் வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு அவ்வப்போது அமெரிக்காவில் சிகிச்சைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது விரல்களுக்கு ரத்தம் ஓட்டம் போகாததால் அவை அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட்டன. இந்த நிலையில் விஜயகாந்துக்கு கடந்த 18ஆம் தேதி மாலை திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அவருக்கு கடுமையான சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் மூச்சுவிடுவதிலும் சிரமம் இருந்தது. இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதில் விஜயகாந்துக்கு சளி தொல்லை சீராவதற்கு கூடுதல் சிகிச்சை அளிக்க வேண்டும்.

எனவே அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று 3ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் மீண்டும் சொதப்பிய மும்பை - லக்னோ அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top