Connect with us

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

Cinema News

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படப்பிடிப்பு நிறைவு..!!

பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற இளம் நடிகை என்ற பெயரை பெற்றுள்ள இவரது நடிப்பில் தற்போது ஏரளாமான படங்கள் உருவாகி வருகிறது.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தான் ‘ரிவால்வர் ரீட்டா’ . சந்துரு இயக்கம் இந்த படத்தில் கீர்த்தியுடன் சேர்ந்து சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் 1 st லுக் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் அடுத்த அப்டேட் ஒன்றை படக்குழு வெளிடியிட்டுள்ளது.

அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி இருப்பதால் விரைவில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மும்பை - கொல்கத்தா அணிகள் மோதல்..!!

More in Cinema News

To Top