Connect with us

ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH – RR இன்று பலப்பரீட்சை..!!

Featured

ஹைதராபாத்தில் இன்று அசத்தப்போவது யார்..? SRH – RR இன்று பலப்பரீட்சை..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் வெறித்தனமாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் அசுர பலம் கொண்ட சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் ஹைதராபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் SRH – RR அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டியில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது முதல் இடத்தில் கெத்தாக உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் கம்மிங்ஸ் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இரு அணிகளும் தலா 9 வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் சீறிப்பாய்ந்த டெல்லி அணி - லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top