Connect with us

உலகக்கோப்பையில் சொதப்பிய பாகிஸ்தான் அணி – கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவிப்பு..!!

CWC23

உலகக்கோப்பையில் சொதப்பிய பாகிஸ்தான் அணி – கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவிப்பு..!!

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறியதால் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்த போட்டிகளில் இந்தியா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா , தென்னாபிரிக்க ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது .

அதேபோல் இந்த பக்கம் பாக்கிஸ்தான் , நெதர்லாந்து , பங்களாதேஷ் , இலங்கை , இங்கிலாந்து ,ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் முடிந்த வரை போராடி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது .

இதில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் 4 போட்டியில் வெற்றி பெற்றும் 5 போட்டியில் தோல்வியை சந்தித்தும் புள்ளிகள் பட்டியலில் 5 வது இருந்தது.

இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பேட்டிங் , பவுலிங் , பீல்டிங் என அனைத்திலும் பாகிஸ்தான் அணி சொதப்பியதால் தான் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது என்றும் , இதற்கு பாகிஸ்தான் அணியை வழி நடத்திய கேப்டன் பாபர் அசாம் மற்றும் பாகிஸ்தான் தேர்வுக்குழு தான் காரணம் என பல கருத்துக்கள் இணையத்தில் உலா வருகிறது.

இந்நிலையில் 50 ஓவர், டி20, டெஸ்ட் என அனைத்து ஃபார்மேட்களில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக பாபர் அசாம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

“இது கடினமான முடிவு தான் ஆனால் இது சரியான நேரம் என்று நினைக்கிறேன்” என்ற கேப்சனுடன் தனது ராஜினாமாவை பாபர் அசாம் அறிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பந்துவீச்சில் மிரட்டிவிட்ட கொல்கத்தா - டெல்லி அணி 153 ரன்கள் குவிப்பு..!!

More in CWC23

To Top