Connect with us

CWC 23 : சேஸிங்கில் பட்டயகிளப்பும் நியூசிலாந்து அணி – போறபோக்க பார்த்த போயிடும்போலயே..!!

CWC23

CWC 23 : சேஸிங்கில் பட்டயகிளப்பும் நியூசிலாந்து அணி – போறபோக்க பார்த்த போயிடும்போலயே..!!

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரமாக விளையாடிய இந்திய அணி 398 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில் தற்போது நியூசிலாந்து சேஸிங்கில் அபாரமாக ஆடி வருவதால் இந்திய ரசிகர்கள் இப்போதிலிருந்தே கடவுளை வேண்ட ஆரம்பித்துவிட்டனர்.

இந்தியாவில் விறுவிறுப்புக்கு பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை முடிந்த போட்டிகளில் இந்தியா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா , தென்னாபிரிக்க ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது .

இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரசிகர்கள் புடைசூழ முதல் அரையிறுதி போட்டியில் இந்திய – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக ஆடி 397 ரன்களை எதிரணிக்கு இலக்காக வைத்தது.

இந்திய அணி தரப்பில் சிறப்பாக விளையாடிய கில் 79 ரன்களும் , விராட் கோலி 117 ரன்களும் , ஷ்ரேயஸ் 105 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வரும் நியூசிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது . அதேசமயம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இன்று இந்திய அணி செம சொதப்பலான பவுலிங்கை வீசி வருகிறது பீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை என்பதால் ஆட்டம் மெல்ல மெல்ல நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றுகொண்டிருக்கிறது.

இதனால் இப்போதிலிருந்தே இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடவுளை வேண்டிக்கொண்டு இருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்து அணி 30 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களில் உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகை மடோனா செபாஸ்டியன் Glamour போட்டோஷூட்..

More in CWC23

To Top