Connect with us

பொங்கலுக்கு கொடுத்த இலவச வேட்டி, சேலை 78 சதவீதம் பாலியஸ்டர் – பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

Featured

பொங்கலுக்கு கொடுத்த இலவச வேட்டி, சேலை 78 சதவீதம் பாலியஸ்டர் – பகீர் கிளப்பிய அண்ணாமலை..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசால் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட இலவச வேட்டி, சேலையில் 78 சதவீதம் பாலியஸ்டர் கலந்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் என் மண் என் மக்கள் பயணம் மேற்கொண்ட அண்ணாமலை அங்குள்ள மக்கள் மத்தியில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தி செய்த ஊழல் குறித்து உரையாடினார்.

அமைச்சர் காந்தியின் பெயருக்கும் அவரது செயல்பாடுகளுக்கும் பொருத்தமே கிடையாது. நெசவுத் தொழிலாளர்களிடம் வேட்டி, புடவை கொள்முதலுக்கு கமிஷன் கேட்பதால் கமிஷன் காந்தி என்றழைக்கப்படும் இவர், பொங்கல் தொகுப்பில் இலவச காட்டன் வேட்டி சேலை வழங்குவதிலும் ஊழல் செய்திருக்கிறார். விஞ்ஞானத் திருட்டில் திமுகவை மிஞ்ச இந்த உலகத்திலேயே ஆள் கிடையாது.

வழக்கமாக வேட்டி நெசவு செய்ய பருத்தி நூல் மட்டுமே பயன்படுத்தப்படும், இந்த ஆண்டு பருத்தி நூல் குறைவாகவும் பாலியஸ்டர் நூல் அதிகமாகவும் பயன்படுத்தி நெசவு செய்துள்ளனர்.

கிலோ ₹320 வரை விற்கப்படும் பருத்தி நூலை வாங்காமல், அதில் பாதி விலையான ₹160க்கே கிடைக்கும் பாலியஸ்டர் நூலில் வேட்டி தயாரித்து மக்களை ஏமாற்றி உள்ளனர்.

பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்ட ஒரு வேட்டியை, கோவையில் உள்ள ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், இவர்கள் மக்களுக்கு கொடுத்த வேட்டியில் 78 சதவீதம் பாலியஸ்டர் வெறும் 22 சதவீதம் மட்டுமே பருத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

உற்பத்தி செலவைக் குறைத்துவிட்டு, பெரிய அளவில் ஊழல் செய்திருக்கிறார்கள் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெயில் தாங்க முடியாத 300 யூனிட் மின்சாரம் இலவசமாக தாருங்கள் - வானதி சீனிவாசன் கோரிக்கை

More in Featured

To Top