Connect with us

லால் சலாம் படத்தின் சென்சார் குறித்து வெளியான டக்கர் தகவல் – அப்போ அதுலாம் இதுல இருக்கா..?

Cinema News

லால் சலாம் படத்தின் சென்சார் குறித்து வெளியான டக்கர் தகவல் – அப்போ அதுலாம் இதுல இருக்கா..?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் மிரம்மாண்டமாக உருவாகி உள்ள லால் சலாம் படத்தின் சென்சார் சான்றிதழ் தற்போது வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் .

மேலும் இப்படத்தில் மொய்தீன் பாய் எனும் கவுரவ கதாப்பாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அவருடன் சேர்ந்து இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ்வும் நடித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் படு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .

உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் பிப் 9 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்திற்கு U/A சான்றிதழை சென்சார் போர்டு வழங்கி உள்ளது இதனால் இந்த படத்தில் நிச்சயம் அதிரடியான சண்டை காட்சிகள் நிறைய உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top