Connect with us

ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துமா மும்பை..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

Featured

ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துமா மும்பை..? டாஸ் வென்ற மும்பை பந்துவீச முடிவு..!!

IPL கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன் ரைஸரஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 55 ஆவது லீக் போட்டியில் SRH – MI அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் பேட் கம்மனிங்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்டிக் பாண்டியா முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து மும்பை அணிக்கு எதிராக அதிகார ரன்கள் எடுத்து கடுமையான இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய உள்ளது

நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள பேட் கம்மிங்ஸ் தலைமையிலான சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 8 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரி நடிப்பில் உருவான கருடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

More in Featured

To Top