Connect with us

குஜராத்தை வீழ்த்தி வெற்றி நடைபோடுமா பெங்களூரு – சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை..!!

Featured

குஜராத்தை வீழ்த்தி வெற்றி நடைபோடுமா பெங்களூரு – சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பலப்பரீட்சை..!!

ரசிகர்களின் விண்ணை பிளக்கும் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் பெங்களூரு – குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள உலக புகழ் பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 52 ஆவது போட்டியில் RCB – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள கீழ் தலைமையிலான குஜராத் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 6 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 8 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள டுப்ளிசஸ் தலைமையிலான பெங்களூரு அணி 3 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இரு அணிகளும் தலா 9 வெற்றியை தனதாக்கி இருக்கின்றன.

இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 2-ல் வெற்றி கண்டுள்ளன.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top