Connect with us

பந்துவீச்சில் கெத்து காட்டிய பஞ்சாப் – சென்னை அணி 167 ரன்கள் குவிப்பு..!!

Featured

பந்துவீச்சில் கெத்து காட்டிய பஞ்சாப் – சென்னை அணி 167 ரன்கள் குவிப்பு..!!

ரசிகர்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் தரம்சாலாவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் இன்று [பிற்பகல் நடைபெறும் தொடரின் 53 ஆவது போட்டியில் CSK – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக கடினமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம் போல் ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர்.

நிதானமாக ஆடிய இருவரும் அணிக்கு தேவையான ரன்களை மெல்ல மெல்ல எடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே வெறும் 9 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து மைதானத்திற்குள் வந்த அதிரடி ஆட்டக்காரர் துபேவை இந்த முறையும் டக் அவுட் ஆகி வெளியேறினார் . பின்னர் மிட்சல் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது இருவரும் தலா 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த ஜடேஜா தனி ஆளாக போராடி 43 ரன்கள் இந்த பக்கம் ஸ்ட்ரிகிள் இருந்த தோனி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்து. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் தரம்சாலாவில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் சொதப்பிய ராஜஸ்தான் அணி - பஞ்சாப் அணிக்கு 145 ரன்கள் இலக்கு..!!

More in Featured

To Top