Connect with us

பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் – RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

Featured

பெங்களூரு அணியிடம் ஆல் அவுட்டான குஜராத் – RCB அணிக்கு 148 ரன்கள் இலக்கு..!!!

ரசிகர்களின் விண்ணை பிளக்கும் ஆரவாரத்துடன் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி குஜராத் அணியை பேட்டிங் செய்ய அளித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் பெங்களூரில் உள்ள உலக புகழ் பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 52 ஆவது போட்டியில் RCB – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதையடுத்து பெங்களூரு அணிக்கு எதிராக கடினமான இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற முனைப்பில் குஜராத் அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்க சாகா மற்றும் கில் சிறப்பான தொடக்கதை கொடுப்பார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் சொற்ப ரங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து வந்த சாய் சுதர்சனும் வந்த வேகத்தில் செல்ல குஜராத் அணி பெங்களூர் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது.

பின்னர் வந்த ஷாருக்கான் மற்றும் டேவிட் மில்லர் ஓரளவு நிதானமாக ஆட இவர்களும் தலா 30 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினர்.

இறுதியில் 20 ஆவது ஓவரில் குஜராத் அணி ஆல் அவுட்டான நிலையில் 147 ரன்கள் மட்டுமே எடுத்தது . இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பெங்களூர் அணி விளையாடி வருகிறது.

இந்நிலையில் பெங்களூரில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நிதி வழங்கிய நடிகர் தனுஷ்..!!

More in Featured

To Top