Connect with us

ஜூன் மாதத்தில் வெளியாகிறது தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் – வெளியான டக்கர் அறிவிப்பு..!!

Cinema News

ஜூன் மாதத்தில் வெளியாகிறது தனுஷின் ‘ராயன்’ திரைப்படம் – வெளியான டக்கர் அறிவிப்பு..!!

தனுஷ் இயக்கி நடிக்க உள்ள ராயன் இடத்தின் ரிலீஸ் மற்றும் முதல் சிங்கிள் குறித்த சிறப்பான தரமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தனது 50 ஆவது படத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நாள் முதல் இப்படம் குறித்து எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது .

இப்படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் , செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா,அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் அடுத்த கட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது ராயன் படக்குழு ஒரு சிறப்பான அப்டேட்டை வெளியிட்டுள்ளது .

அதன்படி தனுஷ் இயக்கி நடிக்கும் ‘ராயன்’ படத்தின் முதல் பாடல் மே 9ம் தேதி வெளியாகும் என்றும் திரைப்படம் இந்தாண்டு ஜூன் மாதத்தில் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விரைவில் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் - தயாரிப்பாளர் கொடுத்த டக்கர் அப்டேட்..!!

More in Cinema News

To Top