Connect with us

விமல் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

Cinema News

விமல் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது..!!

விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல துடிப்பான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விமல். சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சீனா காதாபாத்திரங்களில் நடித்து பின்னர் படி படியாக முன்னேறி இன்று கலக்கல் கதாநாயகனாக விமல் வலம் வருகிறார்.

எல்லாம் நல்லபடி சென்றுகொண்டிருக்க திடிரென நடிகர் விமல் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் காணாமல் போய்விட்டார். சிலர் அவருக்கு பட வாய்ப்புகள் வருவதில்லை என்றும் பலர் அவர் சொந்த பிரச்சனைகள் காரணமாக படங்களில் நடிக்கவில்லை என்றும் கருத்து கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ள நடிகர் விமல் நல்ல பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதன்படி தற்போது இவரது நடிப்பில் உருவாகும் புதிய படம் தான் `போகுமிடம் வெகுதூரமில்லை’ . மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விமல் கருணாஸ் உள்ளிட்ட ஏரளாமான முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர் .

இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்புத்தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top