Connect with us

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

Cinema News

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

ஓ மை கடவுளே இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் முதல் பாலில் சிக்ஸர் அடிப்பது போல் முதல் படத்திலேயே மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்று இயக்குநராகவும் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார்.

இவரது இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் இவரே இயக்கி அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி தயாரிப்பு நிறுவனத்திற்கு 100 கோடி கலைக்சனையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரதீப் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் விறுவிறுப்பாக இயக்கி வருகிறார் . இந்த படத்தை முடித்த கையேடு பிரதீப்பு ஹீரோவாக இன்னொரு படத்தில் கமிட்டாகி நடிக்க உள்ளார்.

இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது

அதன்படி AGS நிறுவனம் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘டிராகன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பூஜையுடன் தொடங்கிய நடிகர் கவினின் அடுத்த படம் - வைரல் போட்டோஸ்..!!

More in Cinema News

To Top