Connect with us

தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி..!!

Featured

தமிழ்நாட்டில் 12 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – இந்த முறையும் மாணவர்களை விட மாணவியர் அதிகளவில் தேர்ச்சி..!!

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதிய நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது .

12 வகுப்பு பொதுத்தேர்வில் இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 94.56 % ஆக உள்ளது. தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் .

மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது;

97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது;

97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது;

90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது

இந்தாண்டு மாணவர்களை விட மாணவியர் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7,532 பள்ளிகளில் . 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2478 , 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 397

பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி சதவீதம்:

அறிவியல் பாடப் பிரிவுகள் – 96.35%

வணிகவியல் பாடப் பிரிவுகள்-92.46%

கலைப் பிரிவுகள் – 85.67%

தொழிற்பாடப் பிரிவுகள் – 85.85%

முக்கிய பாடங்களில் தேர்ச்சி விகிதம்:

இயற்பியல் – 98.48%

வேதியியல் – 99.14%

உயிரியல் – 99.35%

கணிதம் – 98.57%

தாவரவியல் – 98.86%

விலங்கியல் – 99.04%

கணினி அறிவியல் – 99.80%

வணிகவியல் – 97.77%

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மூன்றாம் முறை ஆட்சியை கைப்பற்ற துடிக்கும் பிரதமர் மோடியின் மீது எதிர்ப்பு அலை வீசுகிறது - செல்வப்பெருந்தகை சாடல்

More in Featured

To Top