Connect with us

தொடர் தோல்விகளை சந்திக்கும் மும்பை அணி – சக வீரர்களை ஊக்கப்படுத்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா..!!

Featured

தொடர் தோல்விகளை சந்திக்கும் மும்பை அணி – சக வீரர்களை ஊக்கப்படுத்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா..!!

IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக படுதோல்வியை சந்தித்த மும்பை அணி தொடர் தோல்விகளால் துவண்டுபோயுள்ள நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஊக்கப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் மும்பையில் உள்ள உலக புகழ் பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற தொடரின் 51 ஆவது போட்டியில் MI – KKR அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை அந்த முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது . இதையடுத்து மும்பை அணிக்கு கடின இலக்கை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது.

ஓரளவு சுமாராக பேட்டிங் செய்த கொல்கத்தா அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்கள் எடுத்தது .
இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங் செய்தது.

பந்துவீச்சில் அற்புதமாக செயல்பட்ட மும்பை அணி பேட்டிங்கிலும் பட்டயகிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டியில் ஆரம்பத்திலேயே பல முக்கிய விக்கெட்டுகளை அடுத்ததடுத்து இல்லாதது.

இதையடுத்து கொல்கத்தா அணியின் பந்துவீச்சு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிய மும்பை பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஆட்டமிழக்க 170 என்ற இலக்கை மும்பை அணியால் இறுதி வரை எட்டமுடியவில்லை.

இந்நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு மனம் திறந்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறியதாவது :

தொடர்ந்து போராடுங்கள். இதைதான் நான் எனக்கும் சொல்லி கொள்வேன். இது சவாலானதுதான். ஆனால் நீங்கள் அதனை ஏற்க வேண்டும்.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட எங்களை பேட்டிங்கில் அந்த அளவுக்கு சிறப்பாக செய்லபட முடியவில்லை நம்பிக்கையுடன் அடுத்த போட்டிக்கு தயாராகுவோம் என மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS LSG : பேட்டிங்கில் அசத்துமா டெல்லி..? டாஸ் வென்ற லக்னோ பந்துவீச முடிவு..!!

More in Featured

To Top