Connect with us

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் அரண்மனை 4 – இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் அரண்மனை 4 – இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள ‘அரண்மனை 4’ படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் சுந்தர்.சி . இவரது இயக்கத்தில் இதுவரை எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தாலும் இவர் இயக்கி நடித்த அரண்மனை படத்தின் அணைத்து பாகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் தான் அரண்மனை 4 .

சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படம் கடந்த 3 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது .

முதல் நாளில் இருந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் சுந்தர் சி-க்கு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்நிலையில், இப்படம் வெளியாகி இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் . இதுவரை உலகளவில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்து பட்டையை கிளப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DC VS LSG : பேட்டிங்கில் அசத்துமா டெல்லி..? டாஸ் வென்ற லக்னோ பந்துவீச முடிவு..!!

More in Cinema News

To Top