Connect with us

“நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது..! ஐந்தாவது ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து உதவி செய்த KPY பாலா!”

Cinema News

“நான் செய்யும் உதவிகளுக்குப் பின்னால் இருப்பது..! ஐந்தாவது ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து உதவி செய்த KPY பாலா!”

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலா. இவர் ஏற்கனவே ‘கலக்கப் போவது யாரு’ ஆறாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார். அதுமட்டுமின்றி ‘தும்பா’, ‘காக்டைல்’, ‘ஜூங்கா’, ‘புலிப்பாண்டி’ உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவருக்கு ‘குக் வித் கோமாளி‘ நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் தான் பெரிய வாய்ப்புகளைக் கிடைக்க அடித்தளமாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் புகழ், பாலா, சிவாங்கி ஆகியோர் தங்களை நிஜமாகவே கோமாளியாக நினைத்துக் கொண்டு மக்களை மிகவும் மகிழ்வித்தனர்.

அதிலும் குறிப்பாக பாலாவின் டைமிங் சென்ஸ் டயலாக் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று இருந்தது. ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே ஆகவும் படிப்படியாக உயர்ந்து வரும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பாலானவற்றை ஏழை, எளிய மக்களுக்காக உதவி செய்து வருகிறாா். தன்னுடைய சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸூம் வாங்கி கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் கோரதாண்டவம் ஆடிய மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சுமாா் 200 குடும்பத்திற்கு ரூ.1000 கொடுத்து உதவி செய்தார்.

தன்னால் முடிந்த உதவிகளை செய்துவரும் பாலா, தற்போது ஒரு கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துக் கொடுத்து இருக்கிறாா். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் குடிநீரில் சுண்ணாம்பு கலந்து வருவதால், தங்கள் கிராமத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து தருமாறு நடிகர் பாலாவிடம் இப்பகுதி மக்கள் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

அதை ஏற்று, நடிகர் அமுதவாணனுடன் இணைந்து ரூ.3 லட்சம் செலவில் கிராம மக்களுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்துக் கொடுத்துள்ளாா் பாலா. அதுவும் மனு கொடுத்த 10 நாட்களுக்குள் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கி கொடுத்துள்ளாா். அதை தானே நேரில் சென்று திறந்துவைத்தும் சிறப்பு செய்துள்ளாா். சின்னத்திரை நடிகர் பாலாவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோட்டகயப்பாக்கம் கிராம மக்களும் தங்களது நெஞ்சாா்ந்த நன்றி தொிவித்தனா்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலைகிராமத்தில் சாலை வசதி இல்லாமல் இருந்து உள்ளது. இதன் விளைவாக உடல் நலத்தால் பாதிக்கப்படுவோர் 7 கிலோ மீட்டர் மலை பாதையில் டோலி கட்டி செல்லும் நிலை இருப்பதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியை அறிந்த பாலா அந்த கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்து உதவியை செய்து உள்ளார். தொடர்ந்து மக்களுக்கு உதவி செய்து வரும் பாலாவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top