Connect with us

2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் – ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

Featured

2 ரன்னில் சதத்தை தவறவிட்ட ருதுராஜ் – ஹைதராபாத் அணிக்கு 213 ரன்கள் இலக்கு..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் CSK – SRH அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ஹைதராபாத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது .

சென்னையின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர். இதில் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 9 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து மிட்சல் கேப்டன் ருதுராஜுடன் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் . சிறப்பாக விளையாடிய இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்து அசத்தினர் .

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மிட்சல் 52 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்ததாக சரவெடி துபே களத்திற்கு வந்தார். வந்த நொடி முதல் அதிரடி காட்டிய துபே ஹைதராபாத் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார்.

ஒரு பக்கம் துபே அதிரடி காட்ட மறுபக்கம் சதம் விளாசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ருதுராஜ் 98 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இறுதி ஓவரில் களத்திற்கு வந்த தோனி 2 பந்தில் 5 ரன்கள் எடுத்தார் . இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்த சென்னை அணி 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்கிறது .

இந்நிலையில் சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top