Connect with us

நீண்ட நாட்களுக்குப்பின் அடுத்த பட Update கொடுத்த சமந்தா! Viral Pics!

Cinema News

நீண்ட நாட்களுக்குப்பின் அடுத்த பட Update கொடுத்த சமந்தா! Viral Pics!

நடிகை சமந்தாவுக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் தாக்கிய நிலையில் அவர் திரையுலகில் இருந்து சில காலம் விலகி இருப்பதாக அறிவித்திருந்தார். முற்றிலும் அவை சிகிச்சை எடுத்துக் கொண்டு உலகின் சில நாடுகளை சுற்றி வந்தார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது அவர் உடல் நலம் தேறி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாகவும் அடுத்த கட்டமாக படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா நடிப்பில் உருவாகி வந்த ’சிட்டாடல்’ என்ற வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி விட்டதாக தெரிகிறது.

’தி பேமிலி மேன் 2’ வெப் தொடரை இயக்கிய ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் இந்த தொடர், பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் நடித்து வந்த தொடரின் இந்திய வெர்ஷன் என்பது குறிப்பிடத்தக்கது. சமந்தா, வருண் தவான், சிக்கந்தர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இது குறித்த புகைப்படம் ஒன்றை சமந்தா தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’கடைசியாக நாங்கள் சிலவற்றை பார்த்தோம், அது எங்களுக்கு மிகவும் பிடித்தது’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் இயக்குனர்கள் ராஜ், டிகே, சமந்தா, வருண் தவான் ஆகியோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜிம்னாஸ்டிக் வீராங்கணை தீபா கர்மாகர் ஓய்வு அறிவிப்பு..!!

More in Cinema News

To Top