Connect with us

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..

Featured

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு..

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக நவம்பர் 16 முதல் ஜனவரி 16 ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரையில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

அல்டிரா டீலக்ஸ், குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள பேருந்துகள் இயக்கப்படும்; www.tnstc.in மற்றும் டி.என்.எஸ்.டி.சி. செயலி வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

30 நாட்களுக்கு முன் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; பேருந்துகள் பற்றிய தகவல்களுக்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் .

இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் . பயணிகள் அனைவரும் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தொகுப்பாளினி அர்ச்சனா வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு: குடும்பம் கடும் துக்கத்தில்..

More in Featured

To Top