Connect with us

ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

Featured

ஒவ்வரு அடியும் சரவெடி : சஞ்சுவின் அதிரடியால் வீழ்ந்தது லக்னோ..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி லக்னோ அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள எக்கனா ஸ்போர்ட்ஸ் சிட்டியில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் RR – LSG அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது . இதையடுத்து ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் லக்னோ அணி பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க வீரர்களாக குயிண்டன் டி காக் – கே.எல்.ராகுல் களமிறங்கினர் . இதில் அணிக்கு நல்ல தொடக்கத்தை கொடுப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குயிண்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் கடந்த போட்டியில் அதிரடி காட்டிய ஸ்டாயினிஸ் பூஜ்ஜியத்தில் வெளியேற லக்னோ சற்று தடுமாறும் நிலையில் இருந்தது .

இந்நிலையில் லக்னோவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

தீபக் ஹூடா மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து அணியை சரிவில் இருந்து மெல்ல மெல்ல மீட்டனர் . இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் தீபக் ஹூடாவை அஸ்வின் விக்கெட்டாக்கினார்.

அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 11 ரன்களுக்கு நடையைக்கட்ட இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்த லக்னோ அணி 196 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. அணியின் தொடக்க வீரர்களாக இளம் புலி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் களமிறங்கினர். ஆரம்பம் முதல் அதிரடியான ஆட்டத்தை கொடுத்த ஜோடி தொடர் ரன் குவிப்பில் ஈடுபட்டபோது அடுத்தடுத்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து கேப்டன் சாஞ்சுவுடன் ரியான் பராஜ் கைகோர்த்தார் . ஒருபக்க சஞ்சு சாம்சன் அதிரடியில் மிரட்ட மறுபக்கம் அவருக்கு பக்கபலமாக ரியான் நிதானமாக ஆடினார்.

தொடர்ந்து அதிரடியாக ஆடிய கேப்டன் சஞ்சு அரை சதம் கடந்து அசத்த .மறுபக்கம் ஆடிய ரியான் பராக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் கண்ட துருவ் வந்த நொடி முதல் லக்னோ பந்துகளை நாலாபுறமும் சிதறவிட ராஜஸ்தான் அணி இலக்கை எளிதில் கடந்தது.

இறுதிவரை சிறப்பாக ஆடிய சஞ்சு 71 ரன்களும் துருவ் 52 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top