Connect with us

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் முன்னணி வீரருக்கு பதிலாக களமிறக்கப்படும் அஸ்வின்..!!

CWC23

நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் முன்னணி வீரருக்கு பதிலாக களமிறக்கப்படும் அஸ்வின்..!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் முன்னணி வீரருக்கு பதிலாக அஸ்வின் ஆடும் லவனில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தற்போது விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பெற்று முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த லீக் சுற்றில் இந்தியா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா , தென்னாபிரிக்க ஆகிய 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் பாக்கிஸ்தான் , நெதர்லாந்து , பங்களாதேஷ் , இலங்கை , இங்கிலாந்து ,ஆப்கானிஸ்தான் ஆகிய 6 அணிகள் முடிந்த வரை போராடி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

இந்நிலையில் நாளை தொடங்கும் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது . ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த போட்டியில் தமிழ்நாட்டில் சேர்ந்த இந்திய வீரரான ரவிசந்திரன் அஸ்வின் ஆடும் லவனில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை நடைபெறவுள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி போட்டியில், இளம் வீரரான சூர்யகுமாருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஷ்வினை இந்திய அணியின் பிளேயிங் 11ல் சேர்க்க பரிசீலனை நடைபெற்று வந்த நிலையில் அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி விளையாடிய 9 லீக் போட்டிகளில், சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே அஷ்வின் விளையாடினார். இந்நிலையில் நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் சூர்யகுமாருக்கு பதிலாக அஸ்வின் பிளேயிங் 11ல் இடம்பெறுவாரா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரன் குவிப்பில் மீண்டும் சாதனை படைக்குமா SRH..? ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று RCB - SRH அணிகள் மோதல்..!!!

More in CWC23

To Top