Connect with us

திரையரங்குகளில் காற்று வாங்கும் ஜப்பான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..!!

Cinema News

திரையரங்குகளில் காற்று வாங்கும் ஜப்பான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அண்மையில் வெளியான கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் விவரம் குறித்த ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது .

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தியின் குதுகள நடிப்பில் உருவான ஜப்பான் திரைப்படம் கடந்த வாரம் ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே உலகம் முழுவதும் இல்ல திரையரங்குகளில் வெளியானது.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அணு இமானுவேல் நடிக்க அவர்களுடன் சுனில், விஜய் மில்டன், மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் வசூலில் பட்டைய கிளப்பி வருவதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் தற்போது உலகளவில் ஜப்பான் படம் செய்துள்ள வசூல் விவரம் குறித்த தகவல்கள் குறித்து வெளியாகியுள்ளது. அதன்படி, ஜப்பான் திரைப்படம் உலகளவில் இதுவரை சுமார் 18 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

என்னதான் டீசெண்டான வசூல் செய்து வந்தாலும் கார்த்தியின் திரை பயணத்தில் இப்படம் சற்று மோசமான பகுதியை பரிசாக பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.எப்போது நல்ல கதைகளை தேர்தெடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவர் ஏன் இப்படி ஒரு கதையை ஏற்று நடித்தார் என்று அவரது ரசிகர்கள் ஏமாற்றத்தில் கமன்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top