Connect with us

டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

Featured

டெல்லியின் ரன்குவிப்பை தடுக்குமா கொல்கத்தா..? டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் செய்ய முடிவு..!!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் KKR – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். கடந்த போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி யை இந்த போட்டியில் கட்டுப்படுத்தும் முனைப்பில் தற்போது கொல்கத்தா அணி பந்துவீச உள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கவினின் 'ஸ்டார்' படத்தை தாறுமாறாக புகழ்ந்த இயக்குநர் நெல்சன்..!!

More in Featured

To Top